/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுராந்தகம் பி.டி.ஓ., ஆபீசில் 'ரெய்டு' மதுராந்தகம் பி.டி.ஓ., ஆபீசில் 'ரெய்டு'
மதுராந்தகம் பி.டி.ஓ., ஆபீசில் 'ரெய்டு'
மதுராந்தகம் பி.டி.ஓ., ஆபீசில் 'ரெய்டு'
மதுராந்தகம் பி.டி.ஓ., ஆபீசில் 'ரெய்டு'
ADDED : ஜூன் 04, 2025 11:47 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று, செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான, 6 பேர் கொண்ட குழுவினர், சோதனை நடத்தினர்.
அப்போது, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால கண்ணன் அறையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.