ADDED : ஜன 06, 2024 11:26 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்தாண்டு ஜன., 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அக்., 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கடந்த நவ., 4, 5, 25, 26 ஆகிய தேதிகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தியும், டிசம்பர் 9ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில், வாக்காளர் பதிவு அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில், பொதுமக்களிடம் பெயர், திருத்தம், தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன.
வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் கள ஆய்வு செய்து, படிவங்களுக்கு தீர்வு காணும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 5ம் தேதி வெளியிட வேண்டிய இறுதி வாக்காளர் பட்டியல், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் 22ம் தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.