/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கடுக்கலுாரில் பொது கழிப்பறை கிராம மக்கள் வேண்டுகோள்கடுக்கலுாரில் பொது கழிப்பறை கிராம மக்கள் வேண்டுகோள்
கடுக்கலுாரில் பொது கழிப்பறை கிராம மக்கள் வேண்டுகோள்
கடுக்கலுாரில் பொது கழிப்பறை கிராம மக்கள் வேண்டுகோள்
கடுக்கலுாரில் பொது கழிப்பறை கிராம மக்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 12, 2024 12:36 AM
செய்யூர் : செய்யூர் அருகே கடுக்கலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்கழிப்பறை வசதி இல்லாததால், பொதுமக்கள் சாலை ஓரங்களிலும், திறந்தவெளியிலும் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.
அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவில்லை.
சாலை ஓரத்தில் இயற்கை உபாதைகள் கழிக்கப்படுவதால், சாலையில் செல்லும் மக்களுக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய்தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.