/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் கழிப்பறையின்றி தவிப்பு பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் கழிப்பறையின்றி தவிப்பு
பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் கழிப்பறையின்றி தவிப்பு
பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் கழிப்பறையின்றி தவிப்பு
பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் கழிப்பறையின்றி தவிப்பு
ADDED : மார் 20, 2025 09:00 PM
திருப்போரூர்:திருப்போரூரில் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், வட்டார கல்வி வள மையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், சிமென்ட் கிடங்கு ஆகியவை அமைந்துள்ளன.
வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.
இங்கு, துறை சார்ந்து பல்வேறு பணிகளுக்காக, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், இங்கு பொது கழிப்பறை இல்லாததால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அவசர நேரங்களில், பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊழியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.
எனவே, திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், பொது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.