/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/எம்.ஜி.ஆர்., நகர், மயிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புஎம்.ஜி.ஆர்., நகர், மயிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
எம்.ஜி.ஆர்., நகர், மயிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
எம்.ஜி.ஆர்., நகர், மயிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
எம்.ஜி.ஆர்., நகர், மயிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
ADDED : ஜன 07, 2024 11:26 PM

எம்.ஜி.ஆர்., நகர், : சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், பச்சையப்பன் தெருவில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க, அரசு முடிவு செய்துள்ளது. இது, குடியிருப்பு பகுதி என்பதாலும், நெரிசல் மிகுந்த சாலை என்பதாலும், பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதியில், 'போஸ்டர்' ஒட்டப்பட்டுள்ளது.
அதில்,'எம்.ஜி.ஆர்., நகர், பச்சையப்பன் தெருவில் புது டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது. நெசப்பாக்கம் மற்றும் ஜாபர்கான்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள இரு குடிமையங்களின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இதேபோல், மயிலாப்பூர் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இருந்தன. அதில் ஒரு கடை மூடப்பட்டது. தற்போது, பறக்கும் ரயில் நிலையம் அருகில், ஒரு கடை மட்டும் செயல்படுகிறது.
இதனால், தினமும் இங்கு அதிக அளவில் 'குடிமகன்'கள் கூடுகின்றனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் தடுப்பு அமைத்து, மது விற்பனை செய்து வருகின்றனர். சிலர் மது வாங்கி, அங்கேயே குடிக்கின்றனர். இதனால், இவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள், அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
ஏற்கனவே இந்த டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதிகாரிகள் மாற்றுவதாக கூறியுள்ளனர். ஆனால், இன்று வரை கடையை மாற்றாமல் உள்ளதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.