ADDED : மார் 22, 2025 11:24 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, திருப்போரூர் அடுத்த, படூர் தனியார் கல்லுாரி வளாகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், நேற்று, நடந்தது.
முகாமில், 150 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன். இதில், 2,912 மற்றும் மாற்றுத்திறனாளிகள் 12 பேர் பங்கேற்றனர். 503 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.