/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கைவிடப்பட்ட கல் குவாரிகளில் தடுப்பு... கறார் உள்ளாட்சி, கனிமவள துறைக்கு உத்தரவு கைவிடப்பட்ட கல் குவாரிகளில் தடுப்பு... கறார் உள்ளாட்சி, கனிமவள துறைக்கு உத்தரவு
கைவிடப்பட்ட கல் குவாரிகளில் தடுப்பு... கறார் உள்ளாட்சி, கனிமவள துறைக்கு உத்தரவு
கைவிடப்பட்ட கல் குவாரிகளில் தடுப்பு... கறார் உள்ளாட்சி, கனிமவள துறைக்கு உத்தரவு
கைவிடப்பட்ட கல் குவாரிகளில் தடுப்பு... கறார் உள்ளாட்சி, கனிமவள துறைக்கு உத்தரவு
ADDED : மார் 22, 2025 10:55 PM

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில், கைவிடப்பட்ட கல்குவாரிகளில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பாதுகாப்பு கல்குவாரிளில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, கனிமவளம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், பல்லாவரம் ஆகிய தாலுகாவில், பத்து ஆண்டுகளுக்கு முன், 50க்கும் மேற்பட்ட தனியார் கல் குவாரிகள் இயங்கின.
ஒவ்வொரு குவாரியும் சட்டத்திற்கு புறம்பாக, 400 அடிக்கு மேல் கற்களை வெட்டி எடுத்தன. தற்போது, அந்த குவாரிகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன. குவாரி பள்ளங்களில் ஊற்று நீர் கடல்போல் தேங்கி உள்ளது.
இதில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, விடுமுறையை ஜாலியாக கொண்டாட வரும் இளைஞர்கள் பாறை இடுக்குகளில் சிக்கியும், கண்ணுக்கு தெரியாத பாறைகளில் மோதியும் உயிரிழக்கும் சம்பங்கள் தொடர்கின்றன.
செங்கல்பட்டு அடுத்த, புலிப்பாக்கம், செட்டிப்புண்ணியம், கூடுவாஞ்சேரி அடுத்த, கீரப்பாக்கம் ஆகிய குவாரிகளில், கடந்த மூன்று ஆண்டுகளில், 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். செயல்படாத கல் குவாரிகளில், அறிவிப்பு பலகைகள் இல்லாததாலும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்படாததாலும், உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
தற்போது, கல் குவாரிகளில் தேங்கியுள்ள ஊற்றுகளில் தேங்கும் மழைநீரை சுத்திகரித்து, குடிநீராக பயன்படுத்துவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்காக செட்டிப்புண்ணியம், புலிப்பாக்கம் குவாரிகளில், அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, அரசுக்கு, தமிழ்நாடு குடிநீர் வாரியம், ஊரக வளர்ச்சி துறையினர் கருத்துரு அனுப்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள, அனைத்து கைவிடப்பட்ட கல் குவாரிகளிலும், பாதுகாப்பு சுவர் அமைத்து, மக்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க எடுக்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் கனிமவளத்துறையினர் நடவடிக்கை எடுக்க, என கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை, வரும் கோடைகாலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில், கைவிடப்பட்ட குவாரிகளில், பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் கனிம வளத்துறை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடைகாலத்திற்குள் குவாரிகளில் பாதுகாப்பு சுற்றுவர் அமைக்கப்படும்.
கனிமவளத்துறை அதிகாரிகள்
செங்கல்பட்டு.