/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மொபைல்போனை ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு மொபைல்போனை ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு
மொபைல்போனை ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு
மொபைல்போனை ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு
மொபைல்போனை ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 27, 2025 01:11 AM

செங்கல்பட்டு::சாலையில் கிடந்த மொபைல்போனை போலீசில் ஒப்படைத்த மாற்றுத்திறனாளி மாணவரை போலீசார் பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், 35. மாற்றுத்திறனாளியான இவர், செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலை திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு, அரசு பேருந்தில் வந்து செங்கல்பட்டு புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது, அங்கு ஒரு மொபைல் போன் கிடந்துள்ளது. அந்த மொபைல்போனை, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கீழே கிடந்த மொபைல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அவரின் நேர்மையை, போலீசார் பாராட்டினர்.