/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நகராட்சி மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி விபத்து அபாயத்தால் வீரர்கள் அலறல் நகராட்சி மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி விபத்து அபாயத்தால் வீரர்கள் அலறல்
நகராட்சி மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி விபத்து அபாயத்தால் வீரர்கள் அலறல்
நகராட்சி மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி விபத்து அபாயத்தால் வீரர்கள் அலறல்
நகராட்சி மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி விபத்து அபாயத்தால் வீரர்கள் அலறல்
ADDED : செப் 22, 2025 12:46 AM

மறைமலை நகர்;மறைமலை நகர் நகராட்சி மைதானத்தில், அனுமதியின்றி கார் ஓட்ட சிலர் பயிற்சி அளிப்பதால், விபத்தில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தில் மாணவ - மாணவியர், வீரர்கள் பயிற்சி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மறைமலை நகர் நகராட்சி 8வது வார்டில், நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.
இங்கு காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், நின்னகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நுாற்றுக்கணக்கான மக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
கிரிக்கெட், ஓட்ட பந்தயம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு மாணவ - மாணவியர், விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மைதானத்தின் உள்ளே தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள் மற்றும் தனி நபர்கள் கார் ஓட்ட பயிற்சி எடுக்கின்றனர்.
விளையாடும்போது கார்கள் குறுக்கே செல்வதால், விபத்தில் சிக்கிவிடுவோமோ என்ற அசத்தில் குழந்தைகள், மாணவ - மாணவியர் அச்சத்தில் தவிக்கின்றனர்.
எனவே, மறைமலைநகர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மைதானத்தின் உள்ளே கார் ஓட்ட பயிற்சி எடுக்க தடை விதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.