/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/நாய்க்கடி ஊசி போட மறுப்பு செம்மஞ்சேரி மக்கள் தவிப்புநாய்க்கடி ஊசி போட மறுப்பு செம்மஞ்சேரி மக்கள் தவிப்பு
நாய்க்கடி ஊசி போட மறுப்பு செம்மஞ்சேரி மக்கள் தவிப்பு
நாய்க்கடி ஊசி போட மறுப்பு செம்மஞ்சேரி மக்கள் தவிப்பு
நாய்க்கடி ஊசி போட மறுப்பு செம்மஞ்சேரி மக்கள் தவிப்பு
ADDED : பிப் 06, 2024 05:45 AM
சென்னை, : சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்படும். இந்த மருத்துவமனை சென்னை மாவட்டத்தில் உள்ளது.
சில அடி துாரத்தில், செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதுவும் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இரு பகுதிகளிலும் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகம். நாய்க்கடியால் பலர், இரண்டு மருத்துவமனையிலும் தடுப்பூசி செலுத்த செல்கின்றனர். ஆனால், மாவட்ட எல்லையை காரணம் காட்டி, தடுப்பூசி செலுத்தாமல் திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.
வெறி நாய்கடிக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊசி போடாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை, பணியாளர்கள் உணர்ந்தும், இதுபோல் செய்வது கண்டிக்கத்தக்கது.
இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியைச் சுற்றி, 2 லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கின்றனர். நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்த செல்வோரை, இரண்டு மருத்துவமனையிலும் பணியாளர்கள் அலைக்கழிக்கின்றனர்.
செம்மஞ்சேரியில் வசிப்போர், அருகே உள்ள பெரும்பாக்கம் சுகாதார நிலையத்திற்கு சென்றால், நாய்க்கடிக்கு தடுப்பூசி போட மறுக்கின்றனர். 'நீங்கள் வசிக்கும் செம்மஞ்சேரியிலே சென்று ஊசி போடுங்கள்' என்கின்றனர். பெரும்பாக்கத்தினர் செம்மஞ்சேரிக்கு சென்றால், அதேபோல் திருப்பி அனுப்புகின்றனர்.
இரு மருத்துவமனை ஊழியர்களும், மாவட்ட எல்லை பிரச்னையை காரணம் காட்டி, உயிர் மீது விளையாடுகின்றனர். உயர் அதிகாரிகள் தலையிட்டு, எந்த பகுதி மக்களாக இருந்தாலும் நாய்க்கடிக்கு ஊசி போட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, யார் வந்தாலும் தடுப்பூசி செலுத்துகிறோம். சில நாட்கள் மருந்து இல்லையென்றால், அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்துவோம். போதிய ஊசி, மருந்து வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.