/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சாலையோரத்தில் கால்நடைகள் கட்டப்படுவதால் மக்கள் அவதிசாலையோரத்தில் கால்நடைகள் கட்டப்படுவதால் மக்கள் அவதி
சாலையோரத்தில் கால்நடைகள் கட்டப்படுவதால் மக்கள் அவதி
சாலையோரத்தில் கால்நடைகள் கட்டப்படுவதால் மக்கள் அவதி
சாலையோரத்தில் கால்நடைகள் கட்டப்படுவதால் மக்கள் அவதி
ADDED : பிப் 11, 2024 11:37 PM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில், 20க்கும் மேற்பட்டோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடை வளர்ப்போர், தங்களது கால்நடைகளை சாலையோரத்தில் கட்டுவதால், சாலை சகதியாகி விடுகிறது. இதனால், துர்நாற்றம் வீசி, கொசு உற்பத்தி அதிகரிப்பதால் அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரத்தில் கால்நடைகள் கட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.