/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் கீழக்கரணைவாசிகள் புகார் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் கீழக்கரணைவாசிகள் புகார்
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் கீழக்கரணைவாசிகள் புகார்
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் கீழக்கரணைவாசிகள் புகார்
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் கீழக்கரணைவாசிகள் புகார்
ADDED : மார் 18, 2025 12:36 AM

செங்கல்பட்டு; செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர குறைதீர் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, புதிய தொழில் துவங்க கடன் உதவி, குடிசை வீட்டிற்கு மின் இணைப்பு, மதுராந்தகம் பகுதியில் மின் அழுத்த குறைபாடு சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய, 605 மனுக்கள் வரப்பெற்றன.
இதில், அரசு புறம்போக்கு இடங்களில் வசித்துவரும், 400க்கும் மேற்பட்டோர், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு 11.74 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில், செயற்கை கால்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், இலவச பயிற்சி பெற்றுவரும் 40 மாணவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 போட்டித் தேர்வுக்கான இலவச பாட குறிப்புகளை கலெக்டர் வழங்கினார்.
மறைமலை நகர் நகராட்சி, 17வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் நகரவாசிகள், டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதன் விபரம் வருமாறு:
மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட, 17வது வார்டு கீழக்கரணை பிரதான சாலையில், வீட்டு வசதி வாரிய குடியிப்பு அமைந்துள்ள பகுதியில், டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த கடை அமையுள்ள பகுதி வழியாக, கீழக்கரணை, சித்தமனுார், செங்குன்றம், மலைமேடு மற்றும் மறைமலை நகர் தொழிற்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இவ்வழியாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்வோர், பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண்ராஜ் உறுதியளித்தார்.