Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் திறப்பு போக்குவரத்து நெரிசல், விபத்துகளுக்கு தீர்வு

சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் திறப்பு போக்குவரத்து நெரிசல், விபத்துகளுக்கு தீர்வு

சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் திறப்பு போக்குவரத்து நெரிசல், விபத்துகளுக்கு தீர்வு

சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் திறப்பு போக்குவரத்து நெரிசல், விபத்துகளுக்கு தீர்வு

ADDED : ஜூன் 30, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு புறநகர் பகுதியில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் உள்ள ரயில்வே 'கேட்'டை கடந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தவித்து வந்தனர். ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் வாகனங்களும் நெரிசலில் சிக்கின.

இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2008ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவக்கப்பட்டன.

கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம், ஜி.எஸ். டி., சாலை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம், ரவுண்டானா அமைப்பதில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

மீண்டும் 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டு, 138.27 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த நவம்பரில் மீண்டும் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் துவங்கின.

இதில், ஒரகடம் பகுதியில் தாம்பரம் மார்க்கத்தில், மேம்பாலத்தின் வலதுபுறம் வாகனங்கள் செல்லும் வகையில், ஒரு பக்கம் மட்டும் கடந்த பிப்., மாதம் மேம்பாலம் திறக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக, ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம் மார்க்கத்தில் இருந்து ஒரகடம் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல ரவுண்டானாவும், செங்கல்பட்டு மார்க்கத்திலும் பணிகள் வேகமாக நடைபெற்று, மே மாதம் பணிகள் நிறைவடைந்தன.

மேம்பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நம் நாளிதழிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை 4:15 மணியளவில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சினேகா தலைமையில் மேம்பாலம் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பது, இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு. தற்போது அது நிறைவேறி உள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும், ஒரகடம் பகுதிக்கு வேலைக்குச் செல்வோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

த.கண்ணன்,

ஆப்பூர்.

எம்.ஜி.ஆர்., சிலையால் விபத்து அபாயம்


மேம்பாலத்தில் செங்கல்பட்டு மார்க்கத்தில் மண்டபத் தெரு சந்திப்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இரவு நேரங்களில் மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிலையில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த சிலையை இந்த பகுதியில் இருந்து மாற்றியமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us