ADDED : ஜூன் 23, 2025 11:51 PM

குன்றத்துார், குன்றத்துார் அருகே சோமங்கலம், கருணீகர் தெருவைச் சேர்ந்தவர் மாரி, 40; கூலித்தொழிலாளி. இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தில், ஓலை வெட்டுவதற்காக ஏறினார். அப்போது, மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு எனும் விஷ குளவிகள் சூழ்ந்து, மாரியை கொட்டின.
இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.