/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/டீ கடைகளில் திருட்டு; வடமாநில வாலிபர்கள் கைதுடீ கடைகளில் திருட்டு; வடமாநில வாலிபர்கள் கைது
டீ கடைகளில் திருட்டு; வடமாநில வாலிபர்கள் கைது
டீ கடைகளில் திருட்டு; வடமாநில வாலிபர்கள் கைது
டீ கடைகளில் திருட்டு; வடமாநில வாலிபர்கள் கைது
ADDED : ஜன 07, 2024 11:18 PM
திருப்போரூர் : திரிபுரா மாநிலம், உதய்பூர் பகுதியைச் சேர்ந்தோர் நிர்மல் பொத்தார், 36, பிலால் மியா, 36. இவர்கள் இருவரும், சென்னை அருகே உள்ள காரப்பாக்கம் பகுதியில் தங்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், இரவு நேரத்தில், திருப்போரூர், ஆலத்துார், செம்பாக்கம் பகுதிகளில் உள்ள டீ கடைகளின் பூட்டை உடைத்து, பணம், சிகரெட் போன்றவற்றை திருடியுள்ளனர்.
இது தொடர்பாக, டீ கடை உரிமையாளர்கள் திருப்போரூர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, மேற்கண்ட இருவரையும் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 27,௦௦௦ ரூபாய் மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.