/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ விபத்தில் சேதமான இரும்பு தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் விபத்தில் சேதமான இரும்பு தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
விபத்தில் சேதமான இரும்பு தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
விபத்தில் சேதமான இரும்பு தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
விபத்தில் சேதமான இரும்பு தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 01:26 AM

மதுராந்தகம்:செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடி முதல் அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி வரையிலான சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், சாலையின் இரு பக்கவாட்டிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மாமண்டூர், ஜானகிபுரம், கள்ளபிரான்புரம், மதுராந்தகம் அய்யனார் கோவில் சந்திப்பு, ஊனமலை, சோத்துப்பாக்கம்.
மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் அய்யப்பன் கோவில், காவேரி காம்ப்ளக்ஸ், பெரும்பேர் கண்டிகை சாலை சந்திப்பு, தொழுப்பேடு உள்ளிட்ட பகுதிகளில், சமீப காலமாக அதிகமான விபத்துகள் நடந்துள்ளன.
இதனால், சேதமான சாலையோர இரும்பு தடுப்புகள், மின் கம்பங்கள், சிக்னல் கம்பம் உள்ளிட்டவை, பல நாட்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளன.
வாகனங்கள் மோதி சேதமான இரும்பு தடுப்புகள், ஒழுங்கின்றி உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதுமிட்டுமின்றி, சிக்னல் கம்பங்களை மீண்டும் அமைக்காததால், அப்பகுதிகளில் மீண்டும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சேதமான சாலையோர தடுப்புகள் மற்றும் சிக்னல் கம்பங்களை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.