/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/குறுகிய இணைப்பு சாலையால் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்குறுகிய இணைப்பு சாலையால் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
குறுகிய இணைப்பு சாலையால் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
குறுகிய இணைப்பு சாலையால் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
குறுகிய இணைப்பு சாலையால் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 28, 2024 04:04 AM

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிழக்கு மாடவீதி வழியாக நெம்மேலி செல்லும் இ.சி.ஆர்., சாலை உள்ளது.
இச்சாலை பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில், 3 கிமீ., துாரம் உடையது.
இச்சாலையை பயன்படுத்தி திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு, வேளாண் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கானத்துார், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை உட்பட பல கிராமத்தைச் சேர்ந்தோர் வந்து செல்கின்றனர்.
அதேபோல், திருப்போரூர், ஆலத்துார், தண்டலம், செம்பாக்கம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து, நெம்மேலியில் செயல்படும் அரசு கலைக்கல்லுாரிக்கு தினமும், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் வந்து செல்கின்றனர்.
மேலும், தனியார் உப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வாறு செல்லும் வாகனங்கள், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிழக்கு மாடவீதி மற்றும் நெம்மேலி செல்லும் இ.சி.ஆர்., இணைப்பு சாலை வழியாக திரும்பிச் செல்கின்றன.
இச்சாலை, ஏற்கனவே குறுகியதாக இருக்கும் நிலையில், இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களால், மேலும் போக்குவரத்து அதிகரித்து, நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
மேலும், கோவில் விழா மற்றும் முகூர்த்த நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த இணைப்பு சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.