Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மழைநீர் வடிகால்வாயில் மரண பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மழைநீர் வடிகால்வாயில் மரண பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மழைநீர் வடிகால்வாயில் மரண பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மழைநீர் வடிகால்வாயில் மரண பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ADDED : செப் 18, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
வண்டலுார்:வண்டலுார், ஜி.எஸ்.டி., சாலையில், அணுகு சாலை ஓரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் கான்கிரீட் 'சிலாப்' உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருங்களத்துாரிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் இரணியம்மன் கோவில் முதல், உயிரியல் பூங்கா வரை, 1.5 கி.மீ., துாரத்திற்கு அணுகு சாலை உள்ளது.

இந்த அணுகு சாலை ஓரமாக, 20 ஆண்டுகளுக்கு முன், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

அதன் பின், எவ்வித பராமரிப்பும் இல்லாததால், இந்த மழைநீர் வடிகால் துார்ந்து, மழைநீர் செல்ல முடியாதபடி மாறியது.

தற்போது, இந்த வடி கால் மேல் பொருத்தப் பட்டுள்ள கான்கிரீட் 'சிலாப்'கள், 20க்கும் மேற்பட்ட இடங்களில் உடைந்து, மரண பள்ளங் கள் ஏற்பட்டுள்ளன.

அணுகு சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி, இந்த பள்ளங்களில் விழுந்து காயமடைவது அடிக்கடி நடந்து வருகிறது.

எனவே, மழைநீர் வடிகாலை துார்வாரி, உடைந்துள்ள கான்கிரீட்சிலாப்பை புதிதாக பொருத்தவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us