/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/அச்சிறுபாக்கம் அருகே குழந்தையுடன் தாய் மாயம்அச்சிறுபாக்கம் அருகே குழந்தையுடன் தாய் மாயம்
அச்சிறுபாக்கம் அருகே குழந்தையுடன் தாய் மாயம்
அச்சிறுபாக்கம் அருகே குழந்தையுடன் தாய் மாயம்
அச்சிறுபாக்கம் அருகே குழந்தையுடன் தாய் மாயம்
ADDED : பிப் 11, 2024 11:50 PM
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த நேமம் புது காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்த், 31. இவருக்கு, பிரியங்கா, 28, என்ற மனைவியும், ஷாலினி என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 24ல், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவதாக கூறி, குழந்தையுடன் பிரியங்கா வெளியில் சென்றுள்ளார்.
ஆனால், இரவு வரை அவர் வீடு திரும்பாததால், கணவன் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடினர். மனைவி மற்றும் குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி, நேற்று அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் வசந்த் புகார் அளித்தார்.
புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன பிரியங்கா மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.