/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சானடோரியத்தில் சாலையை கடந்த 4 பேரை இடித்து துாக்கி வீசிய கார் தாய், குழந்தைகள் காயம் சானடோரியத்தில் சாலையை கடந்த 4 பேரை இடித்து துாக்கி வீசிய கார் தாய், குழந்தைகள் காயம்
சானடோரியத்தில் சாலையை கடந்த 4 பேரை இடித்து துாக்கி வீசிய கார் தாய், குழந்தைகள் காயம்
சானடோரியத்தில் சாலையை கடந்த 4 பேரை இடித்து துாக்கி வீசிய கார் தாய், குழந்தைகள் காயம்
சானடோரியத்தில் சாலையை கடந்த 4 பேரை இடித்து துாக்கி வீசிய கார் தாய், குழந்தைகள் காயம்
ADDED : ஜூலை 02, 2025 10:50 PM
தாம்பரம்:சானடோரியம் அருகே பள்ளியில் இருந்து மகன், மகளை அழைத்து கொண்டு, சாலையை கடக்க முயன்ற பெண் சித்த மருத்துவர் உட்பட நான்கு பேர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில், காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் சானடோரியம், அப்பாராவ் காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் அருள்தாஸ்.
ராயப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமலா ஹாசல், 48. சானடோரியம் சித்தா மருத்துவமனையில், மருத்துவராக உள்ளார். இவரது மகன் அமரேஷ், 12. மகள் ஹார்லின், 12.
இரட்டையரான இருவரும், சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை, பள்ளியில் இருந்து வேனில் வந்த மகன், மகளை அழைத்து செல்வதற்காக, பணிப்பெண் வேளாங்கண்ணி, 30, என்பவருடன், அமலா ஹாசல், சானடோரியம் ஆஞ்சநேயர் கோவில் அருகே, ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில் காத்திருந்தார்.
குழந்தைகள் வந்ததும், அவர்களை அழைத்து கொண்டு, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றனர். அப்போது, தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி, அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத கார், அவர்கள் மீது மோதியது.
இதில், நான்கு பேரும் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில், சிறுவன் அமரேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து விசாரிக்கின்றனர்.