/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ADDED : ஜூன் 26, 2025 09:28 PM
பல்லாவரம்:பல்லாவரத்தில், கோவில் உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
பல்லாவரம், பெரியார் நகர், மூன்றாவது தெருவில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. வழக்கம் போல் நேற்று காலை, கோவிலைத் திறக்க பூசாரி முயன்ற போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.