ADDED : ஜன 07, 2024 11:24 PM
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன், 35. இவர், சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையோரம், டயர் மற்றும் பஞ்சர் கடை வைத்துள்ளார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, தன் மொபைல்போனை கடையில் வைத்து விட்டு துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடைக்குள் புகுந்த மர்ம நபர், கடையில் வைத்திருந்த மொபைல் போனை திருடிச் சென்றார்.
இது குறித்து, குபேரன் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, மொபைல் போன் திருடும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.