/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மருந்து கடைக்காரர் கொலையை கண்டித்து வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்மருந்து கடைக்காரர் கொலையை கண்டித்து வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
மருந்து கடைக்காரர் கொலையை கண்டித்து வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
மருந்து கடைக்காரர் கொலையை கண்டித்து வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
மருந்து கடைக்காரர் கொலையை கண்டித்து வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 07, 2024 12:35 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் அடுத்துள்ள ஓட்டேரியில், 'கஸ்துாரி' மெடிக்கல் கடை நடத்தி வந்தவர் வினோத்குமார், 45. இவர், ரவுடிகளால் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய ரவுடி சிலம்பரசனின் உறவினர் மற்றும் கூட்டாளி மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதை தொடர்ந்து நேற்று காலை 10:30 மணியளவில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட வணிகர் சங்க தலைவர் இந்திரஜித் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, செங்கல்பட்டு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அனைத்து மாவட்டத்தில் இருந்தும், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:
ஓட்டேரியில் மெடிக்கல் உரிமையாளர் வினோத்குமார் படுகொலை செய்யப்பட்டார். இது கண்டனத்துக்கு உரியது. மேலும், வணிகர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
கொலை செய்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படும். தொடர்ந்து, மருத்துவ சேவைக்காக இயற்றப்பட்ட அவசர சட்டத்தில், மருந்து மற்றும் அனைத்து வணிகர்களையும் சேர்க்க வேண்டும். வினோத்குமார் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும், 1,000த்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.