/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை 15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை
15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை
15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை
15ம் மாடியிலிருந்து குதித்து மனநலம் பாதித்தவர் தற்கொலை
ADDED : மார் 25, 2025 09:56 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன்.58. இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர்.
வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், மனைவியிடம் தண்ணீர் குடிக்க சமையல் அறைக்கு செல்வதாகக் கூறி, வீட்டின் வெளியே வந்து, 15வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், வெங்கடசேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.