/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூர் பகுதிகளில் மாம்பழ விற்பனை ஜோர் திருப்போரூர் பகுதிகளில் மாம்பழ விற்பனை ஜோர்
திருப்போரூர் பகுதிகளில் மாம்பழ விற்பனை ஜோர்
திருப்போரூர் பகுதிகளில் மாம்பழ விற்பனை ஜோர்
திருப்போரூர் பகுதிகளில் மாம்பழ விற்பனை ஜோர்
ADDED : ஜூன் 02, 2025 11:41 PM

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பல ஏக்கர் பரப்பில் மாந்தோப்புகள் உள்ளன.
இங்கு ருமானி, பெங்களூரா, அல்போன்சா உள்ளிட்ட பல வகையான மாம்பழங்கள் விளைகின்றன.
தற்போது புதுப்பாக்கம், மாம்பாக்கம் பகுதிகளில், மாம்பழ சீசன் களைகட்டுகிறது.
கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலையோரம் புதுப்பாக்கம், மாம்பாக்கம் பகுதிகள் அமைந்திருப்பதால், சாலையோரம் ஏராளமான மாம்பழ கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.
பழத்தின் ரகத்திற்கு ஏற்றபடி ஒரு கிலோ 100 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாம்பழங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து, பழ வியாபாரிகள் கூறியதாவது:
மாம்பழம் சீசன் நேரங்களில், சாலையோரத்தில் மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறோம். இப்பகுதியில் விளைந்த ருமானி, பெங்களூரா போன்ற பல்வேறு மாம்பழ ரகங்களை விற்பனை செய்து வருகிறோம்.
இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் என்பதால், பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.