Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாமல்லை புதிய பேருந்து நிலையம் தண்ணீர் வெளியேற்றும் பணி விறுவிறு

மாமல்லை புதிய பேருந்து நிலையம் தண்ணீர் வெளியேற்றும் பணி விறுவிறு

மாமல்லை புதிய பேருந்து நிலையம் தண்ணீர் வெளியேற்றும் பணி விறுவிறு

மாமல்லை புதிய பேருந்து நிலையம் தண்ணீர் வெளியேற்றும் பணி விறுவிறு

ADDED : பிப் 10, 2024 10:36 PM


Google News
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள பகிங்ஹாம் கால்வாய் அருகே, புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது.

சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், 6.80 ஏக்கர் பரப்பில், 67 கோடி ரூபாய் மதிப்பில், 2.50 ஏக்கரில் பேருந்து நிலைய கட்டடம் அமைகிறது.

சப் - கலெக்டர் நாராயண சர்மா, கடந்த 3ம் தேதி, சி.எம்.டி.ஏ., தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பேரூராட்சி உள்ளிட்ட துறை அலுவலர்களுடன், நிலைய அமைவிடத்தை ஆய்வு செய்தார்.

அங்குள்ள குளம் மற்றும் அருகில் தேங்கிய நீரை கண்டு, வருவாய்த் துறை ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அப்பகுதி இரட்டை குட்டை நீர்நிலையாக, ஆவண பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து, சி.எம்.டி.ஏ., அலுவலர்களிடம் விசாரித்தார்.

அப்பகுதியின் குறிப்பிட்ட புல எண் பகுதி, இதற்கு முன் நீர்நிலை பகுதியாக இருந்ததாகவும், பின் அரசு ஒப்புதலுடன், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும பெயரில் மாற்றி ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், குழும அலுவலர்கள் விளக்கினர்.

தனியார் இடமும் கையகப்படுத்தப்பட்டு உள்ளதால், நீர்நிலையை பராமரித்து, அதன் அருகே உள்ள இடத்தில் மட்டுமே கட்டடம் அமைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால், பல அடி உயரத்திற்கு மண் நிரப்பி உயர்த்துவது மற்றும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாய் வெள்ளம் சூழாமலிருக்க, தடுப்புச்சுவர் அமைப்பது குறித்து, சப் - கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், கட்டடம் அமையவுள்ள பகுதியில், ஏரி மண் நிரப்பி, தரைமட்டம் உயர்த்தப்படஉள்ளது.

அதற்கு முன், தரைமட்டத்தை சரிசெய்ய, தேங்கியிருக்கும் நீரை மோட்டார் மூலம் இறைத்து, குளத்தில் விடப்படும் பணி நடைபெறுகிறது. அங்கு, வளர்ந்துள்ள முட்புதரும் அகற்றப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us