Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பழங்குடி இருளர் வழிபாடு மாமல்லையில் குதுாகலம்

பழங்குடி இருளர் வழிபாடு மாமல்லையில் குதுாகலம்

பழங்குடி இருளர் வழிபாடு மாமல்லையில் குதுாகலம்

பழங்குடி இருளர் வழிபாடு மாமல்லையில் குதுாகலம்

ADDED : பிப் 25, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம்:பழங்குடி இனத்தவர்களில், இருளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழக வடக்கு மாவட்டங்கள், அண்டை மாநில எல்லை பகுதிகளில் அதிகம் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குலதெய்வம் கன்னியம்மன், வங்க கடலில் வீற்று அருள்பாலிப்பதாக நம்புகின்றனர். அம்மன் வழிபாட்டிற்காக, மாசிமக நாளில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் கூடுவர்.

மாசிமகத்தை முன்னிட்டு, சில நாட்களாக கடற்கரை பகுதியில் முகாமிட்டு, அங்கேயே சமைத்து தங்கினர். மாசிமக நாளான நேற்று, கடற்கரையில் வழிபாட்டு திட்டு அமைத்து, கன்னியம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு, திருமணம் செய்து கொண்டனர்.

ஆதிதிராவிடர், பழங்குடி நலத்துறை, பழங்குடியினர் ஆய்வு மையம் இணைந்து, இருளர் கல்வி மேம்பாடு, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், கொத்தடிமை ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us