/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஸ்தலசயன பெருமாள் கோவிலில் கோவிலாழ்வார் திருமஞ்சனம்ஸ்தலசயன பெருமாள் கோவிலில் கோவிலாழ்வார் திருமஞ்சனம்
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் கோவிலாழ்வார் திருமஞ்சனம்
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் கோவிலாழ்வார் திருமஞ்சனம்
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் கோவிலாழ்வார் திருமஞ்சனம்
ADDED : ஜன 29, 2024 04:00 AM
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், கடந்த 1998ல் நடைபெற்று, 25 ஆண்டுகள் கடந்தது.
மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, சென்னை, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த உபயதாரர் குமார் என்பவர், 3.51 கோடி ரூபாயில், பல்வேறு திருப்பணிகள் மேற்கொண்டார். பிப்., 1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
வைணவ கோவில்களில், சுவாமி வீற்றுள்ள கர்ப்பகிரஹங்களில், குறிப்பிட்ட அளவில் வெப்பநிலை நிலவும் சூழல் ஏற்படுத்தி பராமரிக்கப்படுகிறது.
தாயின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு, குறிப்பிட்ட வெப்பம் அவசியம் என்பதை போன்றே, பக்தர்களுக்கு அருளும் சுவாமியரின் கர்ப்பகிரஹத்திற்கும் வெப்பச்சூழல் இன்றியமையாததாக கருதப்படுகிறது.
அதற்காகவும், கருவறைக்குள் பூச்சிகளை தவிர்க்கவும், சந்தனம், கஸ்துாரி மஞ்சள், வசம்பு, கிச்சிலிக் கிழங்கு, திருமண் துாள்கள், பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலவை, கர்ப்ப கிரஹ சுவர்களில் பூசப்படும்.
இந்நடைமுறை, கோவிலாழ்வார் திருமஞ்சனம் எனப்படுகிறது. இக்கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சுவாமியர் கர்ப்பகிரஹ சுவர்களில், கோவிலாழ்வார் திருமஞ்சனம் நேற்று நடந்தது.