/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கேளம்பாக்கம்- - தையூர் ஆறுவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க எதிர்பார்ப்புகேளம்பாக்கம்- - தையூர் ஆறுவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
கேளம்பாக்கம்- - தையூர் ஆறுவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
கேளம்பாக்கம்- - தையூர் ஆறுவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
கேளம்பாக்கம்- - தையூர் ஆறுவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2024 04:11 AM

திருப்போரூர் : சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, சிறுசேரி சிப்காட் வரை ஆறு வழிப்பாதையாக உள்ளது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, 4 வழிப்பாதையாக உள்ளது.
இதில், படூர்- - தையூர் இடையே ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர்- - ஆலத்துார் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. படூர் -- தையூர் சாலைக்காக, கேளம்பாக்கம் வழியாக பணி நடக்கிறது.
இதில், படூரில் இருந்து கேளம்பாக்கம் வரை பணிகள் நடக்கின்றன. இந்த புறவழிச்சாலையின் குறுக்கே, கேளம்பாக்கம்- - கோவளம் சாலை வருவதால், அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பால பணிகள் முடிந்த நிலையில், புறவழிச்சாலை அந்த பாலத்துடன் இணைக்கப்படவில்லை. அதேபோல், கேளம்பாக்கத்தில் இருந்து தையூர் வரை, இன்னும் புறவழிச்சாலை பணிகள் துவங்கிய நிலையிலேயே உள்ளன.
தொய்வாக நடைபெறும் புறவழிச்சாலை பணியை விரைந்து முடித்தால், கேளம்பாக்கத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் தடுக்கப்படும்.
எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் வைத்து உள்ளனர்.