/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தைகருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தை
கருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தை
கருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தை
கருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தை
ADDED : பிப் 24, 2024 10:54 PM

மதுராந்தகம்,:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, கருங்குழி அருகே மேலவலம்பேட்டை அடுத்து, வேடந்தாங்கல் கூட்டு சாலை சந்திப்பு வழியாக உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலையை 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மேலும், ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், மெகா சைஸ் பள்ளங்களும் உள்ளன. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் வாகனங்களை ஏற்றி, இறக்கும் போது தடுமாறுகின்றனர். சில நேரம் விபத்துகளிலும் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த இச்சாலையில் நிரந்தர தீர்வாக, தார் கலவை கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.