/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா ஜார்க்கண்ட் கவர்னர் பங்கேற்புவிவேகானந்தா பள்ளி ஆண்டு விழா ஜார்க்கண்ட் கவர்னர் பங்கேற்பு
விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா ஜார்க்கண்ட் கவர்னர் பங்கேற்பு
விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா ஜார்க்கண்ட் கவர்னர் பங்கேற்பு
விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா ஜார்க்கண்ட் கவர்னர் பங்கேற்பு
ADDED : ஜன 05, 2024 11:12 PM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியின் புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் பள்ளியின் 7வது ஆண்டு விழா, நடந்தது.
சிறப்பு விருந்தினராக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசினார்.
பள்ளியில் அதிக மதிப்பெண் மற்றும் தனித்திறன் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ - மாணவியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கவர்னருக்கு, விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியின் தாளாளர் லோகராஜ் நினைவு பரிசாக நடராஜர் சிலை வழங்கினார்.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியின் துணை தாளாளர் ஹரிநாக் ஷி லோகராஜ், பள்ளி முதல்வர் சீதாலட்சுமி, பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.