ADDED : ஜூன் 14, 2025 02:27 AM
பெருங்களத்துார்:போரூரைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி பூர்ணிமா, 24. இவர்களுக்கு ஆறு மாத ஆண் குழந்தை உள்ளது. பூர்ணிமா குடும்பத்தினருடன், வண்டலுார், சிங்கார தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பெருங்களத்துாரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம், அவரது வீட்டிற்கு பூர்ணிமாவின் தாத்தா, பாட்டி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு மதிய உணவு வாங்க, வண்டலுாருக்கு சென்றார். உணவு வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு செல்வதற்காக, பெருங்களத்துார் - வண்டலுார் இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார். போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.