/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கந்தசுவாமி கோவிலில் ரூ.57 லட்சம் வருமானம் கந்தசுவாமி கோவிலில் ரூ.57 லட்சம் வருமானம்
கந்தசுவாமி கோவிலில் ரூ.57 லட்சம் வருமானம்
கந்தசுவாமி கோவிலில் ரூ.57 லட்சம் வருமானம்
கந்தசுவாமி கோவிலில் ரூ.57 லட்சம் வருமானம்
ADDED : ஜூன் 18, 2025 07:54 PM
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விழா மற்றும் முகூர்த்த நாட்களில், கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகை, வெள்ளிப் பொருட்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகின்றன.
கோவிலில், மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன. செங்கல்பட்டு உதவி கமிஷனர் ராஜலட்சுமி, திருப்போரூர் கோவில் செயல் அலுவலர் குமரவேல், செங்கல்பட்டு ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில், 56 லட்சத்து 82 ஆயிரத்து 658 ரூபாய்; 183 கிராம் தங்கம்; 3,154 கிராம் வெள்ளி வருவாயாக கிடைத்துள்ளன.