/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செய்தி எதிரொலியாக இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய எல்.இ.டி., பல்புகள் மாற்றம் செய்தி எதிரொலியாக இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய எல்.இ.டி., பல்புகள் மாற்றம்
செய்தி எதிரொலியாக இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய எல்.இ.டி., பல்புகள் மாற்றம்
செய்தி எதிரொலியாக இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய எல்.இ.டி., பல்புகள் மாற்றம்
செய்தி எதிரொலியாக இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய எல்.இ.டி., பல்புகள் மாற்றம்
ADDED : மார் 22, 2025 11:13 PM

செய்யூர்,
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 23 கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள தெருக்கள், பொது இடங்கள், சாலைசந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி சார்பில் 33 உயர் கோபுர விளக்குகள், 1,742 டியூப் லைட்கள், 1,410 சி.எப்.எல்.,பல்புகள், 61 எல்.இ.டி., விளக்குகள் , 7 சோலார் மின் விளக்குகள் என 3,253 தெரு விளக்குகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
டியூப் லைட் மற்றும் சி.எப்.எல்., போன்ற விளக்குகள் அடிக்கடி பழுதடைவதாலல் பராமரிக்க அதிகபடியான செலவாகிறது.
டியூப் லைட் மற்றும் சி.எப்.எல்., விளக்குகளை அகற்றி, புதிய எல்.இ.டி., தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், 40 வாட் திறன் கொண்ட 1,000க்கும் மேற்பட்ட எல்.இ.டி., விளக்குகள் பேரூராட்சி சார்பாக வாங்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் ஆறு மாதங்களாக, வீணாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேரூராட்சி அதிகாரிகள், பழைய டியூப் லைட் மற்றும் சி.எப்.எல்., விளக்குகளை அகற்றி புதிய எல்.இ.டி., விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.