/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/காதலை கண்டித்தவருக்கு வெட்டு கை துண்டானது; இருவர் கைதுகாதலை கண்டித்தவருக்கு வெட்டு கை துண்டானது; இருவர் கைது
காதலை கண்டித்தவருக்கு வெட்டு கை துண்டானது; இருவர் கைது
காதலை கண்டித்தவருக்கு வெட்டு கை துண்டானது; இருவர் கைது
காதலை கண்டித்தவருக்கு வெட்டு கை துண்டானது; இருவர் கைது
ADDED : ஜன 11, 2024 12:44 AM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் அடங்கிய குயில்குப்பம் இருளர் பகுதியில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த சந்துரு, 20, என்பவர், ஒரு ஆண்டுக்கு முன் வந்து வாடகைக்கு தங்கியுள்ளார்.
அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை, சந்துரு காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் உறவினர் கார்த்திக், 26, சந்துருவை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த சந்துரு மற்றும் 17 வயதுடைய அவர் நண்பர் இணைந்து, கார்த்திக்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு, கார்த்திக் மற்றும் அவர் நண்பர்கள் மூன்று பேர், இருசக்கர வாகனங்களில் கொட்டமேடு - -மானாமதி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
இதை நோட்டமிட்ட சந்துருவும், அவரின் நண்பரும், ராயமங்கலம் பகுதியில் மறைந்திருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார்த்திக்கை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மடக்கினர். கார்த்திக்குடன் வந்த நண்பர்கள் தப்பியோடினர்.
கார்த்திக்கை சந்துருவும், அவரின் நண்பரும் சரமாரியாக வெட்டினர். இதில், கார்த்திக்கின் இடது கை துண்டானது. மேலும், முகம், கை, காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
கார்த்திக் உடன் வந்த நண்பர்கள், அப்பகுதி மக்களுக்கும், மானாமதி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார்த்திக்கை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையில், போலீசார் மற்றும் பொதுமக்கள் சந்துருவை மடக்கி பிடித்தனர். பின், சந்துரு அளித்த தகவலின்படி, அவரின் 17 வயது நண்பரும் பிடிபட்டார்.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.