/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மின்சார ரயில்கள் ரத்து ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்மின்சார ரயில்கள் ரத்து ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
மின்சார ரயில்கள் ரத்து ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
மின்சார ரயில்கள் ரத்து ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
மின்சார ரயில்கள் ரத்து ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
ADDED : பிப் 12, 2024 12:14 AM

தாம்பரம் : தாம்பரம்-- - கோடம்பாக்கம் இடையே ரயில்வே தண்டவாளம் மற்றும் ரயில்வே கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட ரயில்கள், நேற்று காலை 10:30 முதல் மதியம் 3:30 மணி வரை ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, நேற்று பேருந்தில் பயணம் செய்வதற்காக, தாம்பரம் பஸ் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் அதிகளவில் ரயில் பயணியர் குவிந்ததால், தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், பயணியரின் அதிகரிப்பால், பேருந்துகளின் உள்ளேயும் நெரிசல் ஏற்பட்டது. ரயில் சேவை ரத்து காரணமாக, கூடுதல் அரசு பேருந்து இயக்கப்பட்டது.
இருந்த போதிலும், அதிகளவிலான பயணியர் குவிந்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மாலை மீண்டும் ரயில் சேவை துவங்கிய பின், கூட்ட நெரிசல் படிப்படியாக குறைந்தது.