ADDED : ஜன 30, 2024 08:54 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நடந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, கூடுதல் கலெக்டர் அனாமிகா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், அரசு நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு ஊராட்சி நிதி கையாடல் உள்ளிட்ட 247 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.