Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம்... மீட்பு: செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை

ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம்... மீட்பு: செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை

ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம்... மீட்பு: செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை

ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம்... மீட்பு: செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை

UPDATED : மே 12, 2025 12:51 AMADDED : மே 11, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
பல்லாவரம்:செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ராஜிவ்காந்தி நகரில் தனியார் வசம் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும், ஏகப்பட்ட அரசு புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தனியார் வசம் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை கணக்கெடுத்து, அவற்றை மீட்டு, மாநகராட்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

ஆனால், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக, அதுபோன்ற இடங்களை மீட்க முடியவில்லை.

இதனால், மாநகராட்சி திட்டங்களுக்கு போதிய இடமில்லாத சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், இரண்டாவது மண்டலம், பல்லாவரம், ராஜிவ்காந்தி நகரில், பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடம் தனியார் வசம் இருப்பதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின்படி , பல்லாவரம் வருவாய் துறையினர் அந்த இடத்தை அளவீடு செய்ததில், அது கல்லாங்குத்து எனப்படும் அரசு புறம்போக்கு நிலம் என்பதும், 31 சென்ட் தனியார் வசம் இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், 31 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை, போலீஸ் பாதுகாப்புடன், நேற்று முன்தினம் கையகப்படுத்தி, சுற்றி வேலி அமைத்தனர். அந்த நிலத்தின் மதிப்பு, 5 கோடி ரூபாய்.

கையகப்படுத்த அரசு புறம்போக்கு நிலம், மாநகராட்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்லாவரம் நகரம், நகராட்சியாக இருந்த போது, பல்லாவரத்தில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு திடல் மற்றும் 17வது வார்டில் அம்பேத்கர் திடல் ஆகிய மைதானங்களை மேம்படுத்த வேண்டும். இந்த மைதானங்களை மேம்படுத்தினால், இளைஞர்கள் பயனடைவர். இதேபோல், மாநகராட்சியில் உள்ள, ஐந்து மண்டலங்களிலும் ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மீட்டு, இளைஞர்களின் வசதிக்காக, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.

சி.முருகையன், 68

செயலர், குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம்,

குரோம்பேட்டை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us