/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கருங்குழி - மாமல்லபுரம் 4 வழிப்பாதை சாத்தியக்கூறு ஆராய அரசு அறிவிப்பு கருங்குழி - மாமல்லபுரம் 4 வழிப்பாதை சாத்தியக்கூறு ஆராய அரசு அறிவிப்பு
கருங்குழி - மாமல்லபுரம் 4 வழிப்பாதை சாத்தியக்கூறு ஆராய அரசு அறிவிப்பு
கருங்குழி - மாமல்லபுரம் 4 வழிப்பாதை சாத்தியக்கூறு ஆராய அரசு அறிவிப்பு
கருங்குழி - மாமல்லபுரம் 4 வழிப்பாதை சாத்தியக்கூறு ஆராய அரசு அறிவிப்பு
ADDED : மார் 22, 2025 11:23 PM
மாமல்லபுரம், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கருங்குழி - மாமல்லபுரம் இடையே, நான்குவழிப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக, அரசு அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக கடக்கிறது. தலைநகர் சென்னையில் இருந்து மத்திய, தெற்கு, மேற்கு ஆகிய மாவட்ட பகுதிகளுக்கும், பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கும் செல்லும் வாகனங்கள், இச்சாலை வழியாக கடக்கின்றன.
இச்சாலை முன்பு, இருவழித்தடமாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன், தாம்பரத்தில் இருந்து, செங்கல்பட்டு அடுத்த, மாமண்டூர் பகுதி வரையிலும், அடுத்து, திருச்சி வரையிலும் நான்குவழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.
தற்போது வாகனங்கள் பெருகி, போக்குவரத்து அதிகரித்த நிலையில், பெருங்களத்துார் - செங்கல்பட்டு இடையே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதில் கடக்கும், சென்னை பகுதியின் கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் ஆகிய சாலைகள் பகுதி வாகனங்கள், வேறு பாதையில் செல்லும் வகையில், தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
அதாவது, மதுராந்தகம் அடுத்த, கருங்குழி பகுதி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து, திருக்கழுக்குன்றம் வழியாக, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதி சந்திப்பு வரை, 28 கி.மீ., தொலைவிற்கு, நான்குவழிப்பாதையாக அமைக்க முடிவெடுத்துள்ளது.
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும், சென்னை கடலோர பகுதி வாகனங்கள், கருங்குழி - மாமல்லபுரம் பாதையில் கடந்தால், பெருங்களத்துார் - செங்கல்பட்டு இடையே, நெரிசல் தவிர்க்கப்படும். எனவே, கருங்குழி - மாமல்லபுரம் இடையே, நான்குவழிப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக, சட்டசபையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
****