/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளி கல்வித்துறை பெயரில் பெற்றோரை ஏமாற்றும் கும்பல் பள்ளி கல்வித்துறை பெயரில் பெற்றோரை ஏமாற்றும் கும்பல்
பள்ளி கல்வித்துறை பெயரில் பெற்றோரை ஏமாற்றும் கும்பல்
பள்ளி கல்வித்துறை பெயரில் பெற்றோரை ஏமாற்றும் கும்பல்
பள்ளி கல்வித்துறை பெயரில் பெற்றோரை ஏமாற்றும் கும்பல்
ADDED : மார் 20, 2025 09:11 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோரின் மொபைல்போனுக்கு அழைப்பு விடுத்து, பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பேசுவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி, மாவட்ட கல்வித் துறை சார்பில், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோரின் மொபைல்போனுக்கு மர்ம நபர்கள் தொடர் கொண்டு, பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பேசுவதாக தெரிவிகின்றனர்.
பின், பெற்றோரின் வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், குறுஞ்செய்தியில் உள்ள 'கியூ ஆர்' கோட்டினை 'ஸ்கேன்' செய்து அனுப்பும்படியும் கூறுகின்றனர்.
அவ்வாறு ஸ்கேன் செய்தவுடன் சம்பந்தப்பட்டவர் வங்கி கணக்கில் இருந்து, பணம் எடுக்கப்படுகிறது.
எனவே, பள்ளியில் நடைபெறும் இறை வணக்க கூட்டத்தில், இந்த பொய்யான செய்தி குறித்து ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் என, 'வாட்ஸாப்' வாயிலாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.