Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கேளம்பாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

கேளம்பாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

கேளம்பாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

கேளம்பாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

ADDED : ஜன 29, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர், : திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில், ராஜா அண்ணாமலைபுரம் பில்ரோத் மருத்துவமனை, ராகா பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சைட் கேர் பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலம், நியூ சன்பிளவர் அறக்கட்டளை செயலர் சிவராஜ் ஒருங்கிணைப்பில், மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம், நேற்று நடந்தது.

எத்திராஜன்- காளீஸ்வரி நினைவாக, அவர்கள் மகன் மாணிக்கம் 4 லட்சம் ரூபாய் சொந்த செலவில், இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், பத்துக்கும் மேற்பட்ட துறையின் மருத்துவக் குழுவினர் பங்கேற்று, 500க்கும் மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிந்து உடனடி கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

மருந்தாளுனர் கார்த்திக்கேயன் மருந்து மாத்திரைகள் வழங்கினார்.

முகாமில், கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி, சாத்தாங்குப்பம் விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் எல்லப்பன், தையூர் ஊராட்சி தலைவர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us