/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உறுதியிழக்கும் மின்மாற்றி வண்டலுாரில் அச்சம் உறுதியிழக்கும் மின்மாற்றி வண்டலுாரில் அச்சம்
உறுதியிழக்கும் மின்மாற்றி வண்டலுாரில் அச்சம்
உறுதியிழக்கும் மின்மாற்றி வண்டலுாரில் அச்சம்
உறுதியிழக்கும் மின்மாற்றி வண்டலுாரில் அச்சம்
ADDED : ஜூன் 04, 2025 01:08 AM

வண்டலுார்:வண்டலுார், ஜி.எஸ்.டி., சாலையில், உயிரியல் பூங்காவிற்கு முன், 200 மீட்டர் துாரத்தில் அணுகு சாலை துவங்குகிறது.
இந்த அணுகுசாலையின் நடைமேடை அருகே, மின்மாற்றி ஒன்று உள்ளது. மின்மாற்றியின் அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கடுமையாக சேதமாகி உள்ளதால், மெல்ல வலுவிழந்து, மின்மாற்றி சாய்ந்து வருகிறது.
எனவே, பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன், சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் கவனித்து, இந்த மின் மாற்றியின் அடிப்பகுதியில் உள்ள சிமென்ட் பூச்சை சரி செய்து, கம்பத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.