Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ADDED : மார் 20, 2025 01:59 AM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் கோட்டங்களில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது.

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் தலைமையில், வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

இதேபோன்று, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், மாலை 3:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us