/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுராந்தகம் ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வேதனை மதுராந்தகம் ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வேதனை
மதுராந்தகம் ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வேதனை
மதுராந்தகம் ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வேதனை
மதுராந்தகம் ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் வேதனை
ADDED : ஜூன் 19, 2025 01:25 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரியில் இருந்து மதகு வழியாக பாசன நீர் செல்லும் கால்வாயின், கிளை வாய்க்காலை மண் கொட்டி மூடி, தனியார் சுவர் அமைத்துள்ளதால், பாசனத்திற்கு நீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .
மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர் ஆகும்.
ஐந்து மதகுகள் வழியாக 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 7,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
தற்போது, ஏரியிலிருந்து வட திருச்சிற்றம்பலம் முருகன் கோவில் அருகே பாசன நீர் செல்லும் கால்வாய் உள்ளது.
அந்த கால்வாயில் இருந்து பிரிந்து, துணைகால்வாய் வழியாக, மற்ற விவசாய நிலத்திற்கு பாசன நீர் செல்லும் வகையில் கால்வாய் இருந்தது.
அப்பகுதியில், நிலம் வாங்கிய தனியார் அமைப்பினர், வீட்டுமனை பிரிவு அமைத்து, சுற்றி மதில் சுவர் அமைத்துள்ளனர்.
அதனால், பாசன நீர் செல்லும் முதன்மை கால்வாயில் இருந்து பிரிந்து, துணை கால்வாய் வழியாக நீர் செல்லும் பகுதியில் மண் கொட்டி மூடி, கால்வாயினை முழுமையாக துார்த்து சுவர் அமைத்துள்ளனர். தற்போது மதுராந்தகம் ஏரி பணி நடைபெற்று வருவதால், கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாய பணி மேற்கொள்ளப்பட முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது, பாசன கால்வாயினை வீட்டுமனை பிரிவினர், மண் கொட்டி மூடி உள்ளதால், தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மதுராந்தகம் வட்டாட்சியர், நகராட்சி நிர்வாகம் மற்றும் பாசன துறை அதிகாரிகள், ஆய்வு செய்து, விவசாய பயன்பாட்டிற்கு பாசன நீர் செல்லும் கால்வாயை மீட்டு தருமாறு, பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.