/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கல்பட்டு ஏரியை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்கல்பட்டு ஏரியை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
கல்பட்டு ஏரியை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
கல்பட்டு ஏரியை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
கல்பட்டு ஏரியை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : பிப் 24, 2024 01:06 AM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே கல்பட்டு கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த ஏரியின் மூலமாக, 300 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. பனையடிவாக்கம் ஏரி, புத்தின்கோட்டை வயல்வெளி போன்ற பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், கல்பட்டு ஏரிக்கு வந்தடைகிறது.
ஏரி, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், போதிய தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கல்பட்டு ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது:
கல்பட்டு கிராம விவசாயிகளுக்கு, ஏரி தண்ணீரே பிரதான நீர் ஆதாரமாகும். பல ஆண்டுகளாக, இரண்டு ஏரி மதகுகள், கலங்கல் பகுதி பழுதடைந்து உள்ளன.
மேலும், ஏரியின் கால்வாய்கள் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்துபோய் உள்ளதால், போதிய தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால், இப்பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், கல்பட்டு ஏரியை துார் வாரி, மதகு, கலங்கல் பகுதி மற்றும் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.