/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அம்மனுார் ஏரி உபரிநீர் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள் அம்மனுார் ஏரி உபரிநீர் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
அம்மனுார் ஏரி உபரிநீர் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
அம்மனுார் ஏரி உபரிநீர் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
அம்மனுார் ஏரி உபரிநீர் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : செப் 10, 2025 02:05 AM

செய்யூர்:அம்மனுார் ஏரியில் உபரிநீர் கால்வாயில், வளர்ந்துள்ள செடி, கொடிகளை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்யூர் அடுத்த அம்மனுார் கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி உள்ளது. இந்த ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. இதனால், ஏரி நீர்பாசனத்தின் வாயிலாக இப்பகுதியில் அதிக அளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
அம்மனுார் ஏரியில் இருந்து கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக வயல்களுக்கு சென்று, பின் செய்யூர் ஏரிக்கு செல்கிறது.
பல ஆண்டுகளாக ஏரி உபரிநீர் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மழை காலத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அம்மனுார் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.