/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வயலில் அறுந்து கிடந்த மின் கம்பி பறிபோனது விவசாயியின் உயிர் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பி பறிபோனது விவசாயியின் உயிர்
வயலில் அறுந்து கிடந்த மின் கம்பி பறிபோனது விவசாயியின் உயிர்
வயலில் அறுந்து கிடந்த மின் கம்பி பறிபோனது விவசாயியின் உயிர்
வயலில் அறுந்து கிடந்த மின் கம்பி பறிபோனது விவசாயியின் உயிர்
ADDED : ஜூன் 30, 2025 04:09 AM

மதுராந்தகம்:வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
மதுராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் வேதாச்சலம், 60. இவர், நேற்று வழக்கம்போல, தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு, முற்பகல் 11:00 மணியளவில் சென்றுள்ளார்.
அப்போது, அத்திமனம் பகுதியில் வயல்வெளியில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதையறியாமல், வேதாச்சலம், மின் கம்பியை மிதித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த படாளம் போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், விவசாயி உயிரிழந்த தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, ஐந்து மணி நேரமாகியும் அதிகாரிகள் அப்பகுதிக்கு வராததால், கிராமத்தினர் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின், படாளம் போலீசார் பேச்சு நடத்தி சமாதானம் செய்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.