Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கொட்டமேடு செல்லும் நீர்ப்பாசன கால்வாய் துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொட்டமேடு செல்லும் நீர்ப்பாசன கால்வாய் துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொட்டமேடு செல்லும் நீர்ப்பாசன கால்வாய் துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொட்டமேடு செல்லும் நீர்ப்பாசன கால்வாய் துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ADDED : செப் 19, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:கொண்டங்கி ஏரியிலிருந்து, கொட்டமேடு செல்லும் நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் ஒன்றியத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. இதில், பெரிய ஏரிகளுள் ஒன்றான கொண்டங்கி ஏரி, 650 ஏக்கர் பரப்பளவு உடையது.

இந்த ஏரியிலிருந்து நெல்லிக்குப்பம், மேலையூர், கீழூர், கொட்டமேடு செல்லும் நான்கு முக்கிய நீர்ப்பாசன கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் மூலமாக, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப் படுகிறது.

இந்த நீர்ப்பாசன கால்வாய்களில் புற்கள் மற்றும் செடிகள் அதிகமாக வளர்ந்து, தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. இதனால், இந்த காய்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக நெல்லிக்குப்பம், மேலையூர், கீழூர் ஆகிய மூன்று கால்வாய்கள் மட்டும், 7 கி.மீ., துாரத்திற்கு,'பொக்லைன்' இயந்திரம் மூலமாக துார்வாரி சீரமைக்கப்பட்டன.

ஆனால், கொட்டமேடு நீர்ப்பாசன கால்வாய் மட்டும், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட சில நிர்வாக காரணங்களால், துார்வாரி சீரமைக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

மூன்று முக்கிய நீர்ப்பாசன கால்வாய்களை துார்வாரிய நிலையில், கொட்டமேடுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை மட்டும் துார்வாராதது ஏமாற்றமாக உள்ளது.

இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கொட்டமேடு நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும். இதுதொடர்பாக, விவசாயிகள் சங்க கூட்டத்திலும், சப் - -கலெக்டர் மாலதி ஹெலனிடமும் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us