/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கடப்பாக்கத்தில் கண் சிகிச்சை முகாம்கடப்பாக்கத்தில் கண் சிகிச்சை முகாம்
கடப்பாக்கத்தில் கண் சிகிச்சை முகாம்
கடப்பாக்கத்தில் கண் சிகிச்சை முகாம்
கடப்பாக்கத்தில் கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜன 29, 2024 04:01 AM
செய்யூர், : செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், தனியார் மருத்துவமனையில், இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.
இதில், கடப்பாக்கம், ஆலம்பறைக்குப்பம்,வேம்பனுார், கப்பிவாக்கம், விளம்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பரிசோதனையில், 55 பேருக்கு சிறிய கண் குறைபாடு இருந்ததால், கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் 25 பேருக்கு, கண்ணில் புரை அதிக அளவில் வளர்ந்து இருப்பதால், அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.