/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 30, 2025 01:39 AM

ஊரப்பாக்கம்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம் ஊரப்பாக்கம், ஊரணீஸ்வரர் கோவில் குளம் அருகே, 2018ம் ஆண்டு, எம்.எல்.ஏ., நிதியின் கீழ், 6.50 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இதன் அருகே உள்ள ஆழ்துளைக் கிணறு வாயிலாக நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனால், பகுதிவாசிகள் தொடர்ந்து பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு குடிநீர் நிலையத்தின் மோட்டார் பழுதானது. இதையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
பழுதான மோட்டார், இதுவரை சரி செய்யப்படவில்லை. இது குறித்து, காட்டாங்கொளத்துார் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை இல்லை.
தற்போது, பகுதிவாசிகளின் குடிநீர் தேவை அதிகமாகி உள்ளதால், கடைகளில் விற்கப்படும் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால், பண விரயம் ஏற்படுகிறது.
எனவே, பழுதான மோட்டாரை சீரமைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.